முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன்? ஈழத்தமிழர்களுக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி!! - Seithipunal
Seithipunal


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர், டெஸ்ட் உலகின் சாதனை வீரர், மாயஜாலா சுழற்பந்துவீச்சாளர் என அழைக்கப்படுபவர் முத்தையா முரளிதரன். அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக மட்டுமல்ல 800 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரர் முரளிதரன் தான். இதனால் அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்திற்கு 800 என்றே  பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தினை எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாக்கப்படும் இந்த படம் ஆனது, உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. படத்தினை தமிழ் திரையுலகில் முதன்முறையாக கால் பதிக்கும் தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இணைந்து தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் படத்தில் முரளிதரனாக விஜய்சேதுபதி நடிப்பது ஈழத் தமிழர்களை காயப்படுத்தும் என ஈழத்தை சேர்ந்த கவிஞர் ஒருவர் வார இதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மேலும் இதனை தவிர்க்குமாறும் நடிகர் விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முரளிதரன் பாத்திரத்தில் ஏன் நடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். 

முரளிதரன் இலங்கை தமிழராக இருந்தும்,  ஈழத் தமிழ் மக்களின்போராட்டத்திற்கு எதிராகவும், ஈழத் தாய்மார்களின் கண்ணீரை கொச்சைப்படுத்தியும் முரளிதரன் பேசிய கருத்துக்கள், நெஞ்சில் சிங்கள இராணுவத்தின் குண்டுகளைப் போலவே தாக்கியுள்ளது என்கிறார் அந்த கவிஞர். 

மேலும் முரளிதரன் இலங்கை தமிழ் கிரிக்கெட் வீரர் என்பதை விட அவர், சிங்கள கிரிக்கெட் வீரர் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அவர் பேசுவதுதான் சிங்களம் போல இருக்கும் என்று நினைத்தால் ஆனால் அவர் ஒரு சிங்களவராகவே சிந்திப்பதும் பேசுவதையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம். முரளிதரன் வேடத்தில் நடிப்பது ஈழத்துரோகி கருணாவின் வேடத்தில் நடிப்பதற்கு சமம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில், இந்த படத்தில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் சேதுபதி, நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்தது இல்லை, இதை முரளிதரனிடமே இதை நேரில் சொன்னேன். இந்த படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றிய கதை அல்ல. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்கள் படத்தில் இருக்கும். என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன் என கூறினார்.

யாரையும் காயப்படுத்தும் காட்சிகளும் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் நான் தயங்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vjaysethupathi expalin to serilankan tamilans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->