விஜயகாந்த் மகனுக்கு காதல் திருமணம்., பெண் யார் தெரியுமா! - Seithipunal
Seithipunal


நடிகராக வலம் வந்த விஜயகாந்த் பின்னர் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். விஜயகாந்த், பிரேமலதா தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்தவர்கள். 

விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் அரசியலில் களம் இறங்கியுள்ளார். அவ்வப்போது அவரை தேமுதிக மேடைகளில் பார்க்கமுடிகிறது, இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாத்துறையில் உள்ளார். இவர்களில் மூத்த மகனான விஜயபிரபாகரன் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வருகிறார். தற்போது விஜய பிரபாகரனுக்கு 29 வயதை நெருங்கி விட்டது. இதனால் இவருக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இளைய மகனான சண்முக பாண்டியன்  தன்னோடு கல்லுாரியில் படித்த கோவையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இருக்கிறார். இதை வீட்டில் சொல்ல விஜயகாந்தும், பிரேமலதாவும் அவரது காதல் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டார்கள். சமீபத்தில் திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவுக்கு போன விஜயகாந்த் - பிரேமலதாவை, பெண் வீட்டார் சந்தித்து பேசியவர்கள். அப்போதே திருமண விஷயத்தை பற்றியும் பேசி முடித்து விட்டார்கள். கூடிய சீக்கிரமே, விஜயகாந்த் வீட்டில் கெட்டி மேளம் கொட்ட போகிறது. அடுத்து விஜயபிரபாகரனின் திருமணம் நெதர்லாந்து பெண்ணுடன் நடக்க இருக்கிறது.

 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vjayakanth sons marraige


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->