#சற்றுமுன்: சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் ஒப்படைப்பு.!
vj chitra dead body handover
தமிழகம் முழுவதும் பிரபலமான ஒரு சின்னத்திரை நடிகையான சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடி சேர்ந்த தொழிலதிபர் ஹேமந்த் ரவி என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றது.
வரும் ஜனவரி மாதம் இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நடிகை சித்ரா நேற்று அதிகாலை மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த நஸ்ரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னத்திரை நடிகர் சித்ராவின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள், மர்மங்கள் நிறைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவுப்பெற்று, உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானதும் நடிகை சித்ராவின் தற்கொலையில் உள்ள மர்மம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
vj chitra dead body handover