நீண்ட இடைவெளிக்கு பின் விஸ்வாசம் பட இயக்குனர் சிவா போட்ட ட்வீட்! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சிவா, அஜீத் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம். இப்படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்துடன் 4 ஆவது முறையாக நாயன்தாரா இணைந்து நடித்துள்ளார். 


சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது. நடிகர் அஜித்தும், சிவாவும் தீவிரமான சாய்பாபா பக்தர்கள் என்பதால், சாய்பாபாவுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை படத்தின் முதல் பார்வை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி அதிகாலை 03:40 மணியளவில், விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.  

இதையடுத்து தல ரசிகர்கள், படத்தின் செகண்ட் லுக் வெளியிடுமாறு படக்குழுவை கேட்டு கேட்டுக்கொண்டனர். அதன் படி, விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பார்வை ( Second look) வெளியிடப்பட்டது.  

இதை தொடர்ந்து, நவம்பர் 25 ஆம் தேதி எந்த ஒரு முன்னறிவிப்பின்றி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பார்வை முதல், மோஷன் போஸ்டர் வரை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இதனை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்டிங் செய்தனர். 

இதையடுத்து படத்தின் சிங்கிள் டிராக், அதை தொடர்ந்து படத்தின் அனைத்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இதனிடையே, விஸ்வாசம் படம் சென்சார் செய்யப்பட்டு, U சான்றிதழ் பெற்றுள்ளது.  இந்த படம், முழு குடும்பத்துக்கான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கதையை கொண்ட படமாகும். அதுமட்டுமல்லாமல் ஒரு நல்ல சமூக கருத்தோடு கலந்து கொடுத்திருப்பதால் எந்த ஒரு விவாதமும் இன்றி குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக எந்த காட்சியையும் நீக்காமல் "யு" சான்றிதல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், பிரமாண்ட ட்ரெய்லரை டிசம்பர் 30 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது படக்குழு. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான நாள் முதல் இது நாள் வரை படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பு வந்தாலும், ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.  

இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்தாலும்,படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை KJR பெற்றது. இந்நிலையில், இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.  

       

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் சிவா நீண்ட நாட்களுக்கு பின் டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டில், "சாய் சாய். தல அஜித், அஜித் ரசிகர்கள், ஊடக நண்பர்கள், சினிமா ஆர்வலர்கள், எனது குடும்பம், என்னுடைய டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவருடைய வாழ்த்துக்களாலும் விஸ்வாசம் படம் பிரமாண்ட வெற்றி அடைந்துள்ளது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viswasam Movie Director Siva Tweet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->