விஸ்வாசம் படத்தில் அஜித் நடித்த கடினமான காட்சிகள் உருவாக்கப்பட்ட காணொளி வெளியானது.!! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் விஸ்வாசம். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் சிவா, அஜீத் கூட்டணியில் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைத்துள்ளார்.  

இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்துடன் 4 ஆவது முறையாக நாயன்தாரா இணைந்து நடித்துள்ளார். 

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ரூபன்  எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது. பொங்கலை முன்னிட்டு விஸ்வாசம் படம்  கடந்த 10 ம் தேதியன்று உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள விஸ்வாசம் தற்போது வரை ரூ.200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த விஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அஜித்தின் ரசிகர்கள் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

English Summary

viswasam making video


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal