தனது திருமண தேதியை உறுதிசெய்தார் நடிகர் விஷால்.! வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில்  செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர்  நடிகர் விஷால். இதைத்தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக பொறுப்பு வகிடது வந்த விஷால்  நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், வரலக்ஷ்மி எனக்கு நல்ல நண்பர் என்று கூறி விஷால் பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷா என்பவரை  காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியிட்டார்.

அதனை தொடந்து விஷால் மற்றும் அனிஷா இருவருக்கும் மார்ச் 16  ஐதராபாத்தில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், விஷால் தற்பொழுது பேட்டி ஒன்றில் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.

அதன்படி விஷால் மற்றும் அனிஷாவிற்கு வரும் அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishal anisha marriage date announced


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->