ரஜினி மருமகன் விசாகன் தரப்பிலிருந்து மிரட்டல்.! பிரபல இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் விசாகன் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இயக்குனர் நவீன், விசாகன் தரப்பினர் தங்களை மிரட்டுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தற்பொழுது அலாவுதீன் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.  இப்படத்தில் நவீனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

 முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்படுவதாக நவீன் அறிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியபடி படம் வெளியாகவில்லை.

மேலும்  ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளரும், ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் தாய் மாமாவுமான சொர்ணா சேதுராமன், விசாகனை கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்க இயக்குனர் நவீனிடம் அட்வான்ஸாக ரூபாய் 50 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

 இந்நிலையில் அவரை வைத்து படம் இயக்கமால், காலம் தாழ்த்தியதால் தான் கொடுத்த பணத்தை கொடுத்துவிட்டு அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை வெளியிட்டு கொள்ளுங்கள் என்று தடைவிதிக்க  கோரிக்கை வைத்துள்ளார்.

............,

இந்நிலையில் இது குறித்து நவீன் கூறுகையில் நான் விசாகனுக்கு கதை கூறி அவருக்கும் பிடித்துவிட்டது. மேலும் இதற்காக தொடர்ந்து 9  மாதங்கள் வேலை செய்தேன். அதனால் அவரிடம் வாங்கிய பணத்தை பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு  கொடுத்துவிட்டேன்.

 இந்நிலையில் சொர்ணா சேதுராமன் தாங்கள் வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு அலாவுதீன் அற்புத கேமரா படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என கூறிவருகிறார். மேலும் இந்த பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வர விசாகன் மாமா நவீனை கொஞ்சம் மிரட்டுவது போல் பேசியதாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.


பத்து மாசமா நான் ஸ்கிரிப்ட் எழுதாம ஓப்பியடிச்சதா சுவர்ணா சேதுராமன் சார் சொல்றார். இதுக்கு நான் பதில் சொல்றதவிட, நாலு மணி நேரம் ஸ்கிரிப்ட் கேட்டுட்டு 'இப்படி ஒரு கதைய ஹாலிவுட்ல கூட நான் பாத்ததில்லனு சொன்ன விசாகன் பதில் சொல்றதுதான் சரியா இருக்கும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

visagan uncle blackmailed director naveen


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->