ஓடிடியில் மாஸ் சஸ்பென்ஸுடன் ரிலீஸாகும் விக்ரம்.. எதிர்பார்ப்பின் உச்சகட்டத்தில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து இருந்தது. படத்தில் பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். 

இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அனிருத் இப்படத்தின் இசை அமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை செய்தால், கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜூக்கு கார் ஒன்றை பரிசளித்து இருந்தார். உதவி இயக்குனர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனமும் பரிசளிக்கப்பட்டது. இன்னும் சில வாரத்திற்குள் படம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், படம் ஓடிடியில் வெளியாகும்போதுவெட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் சேர்த்து வெளியிடப்படும் என்றும், அதில் கமல்ஹாசனின் இளவயது காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை தரும் என்றும் கூறப்படுகிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram movie OTT release response


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->