விக்ரம் பட வெற்றி.. அனிருத்துக்கு கமல் கொடுத்த பரிசு இதுதானாம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று, வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்த படத்தில், நடிகர் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிக்க நடிகர் சூர்யா எந்த விதமான சம்பளமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வெற்றி பெற்ற நிலையில் நடிகர் கமலஹாசன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கொடுத்துள்ளார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்க்கு கார் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு பைக் உள்ளிட்டவற்றை கமல் பரிசாக கொடுத்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துக்கு நடிகர் கமலஹாசன் என்ன பரிசு கொடுப்பார் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகிய நிலையில் இதை அனிருத்திடமே பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு என்ன பரிசு கொடுப்பார் என்று கேள்வி கேட்டுள்ளார் அதற்கு அனிருத் விக்ரம் படம் கொடுத்தார் என உடனடியாக பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram Gift for aniruth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->