சத்தமே இல்லாமல் முடிந்த விஜய் டிவி புகழின் திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்.!! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள சூழ்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் நமது முகம் மக்களால் பார்க்கப்பட்டால், திரைத்துறையில் சாதித்து விடலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொடர்களில் நடித்து வரும் பல கலைஞர்கள் திரைத்துறையில் நடிக்க துவங்கிவிட்டனர். 

இப்போது முன்னணி நாயகர்களாக இருக்கும் சந்தானம் போன்ற பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள் தான். இப்போதுள்ள ட்ரெண்டில் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்று பலரும் விஜய் தொலைக்காட்சியியல் நடித்தவர்கள் தான். 

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நபர் யோகி என்கிற யோகேஸ்வரன். இவர் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலமாக வித்தியாசமான நடிப்பில் அணைவியாரையும் கவர்ந்தார். 

மேலும், நித்தியானந்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் மிகவும் வைரலாகியது. இந்நிலையில், தற்போது இவர் திடீரென திருமணம் முடித்துள்ளார். இவர் சௌந்தர்யா என்ற பெண்மணியை திருமணம் செய்து முடித்துள்ளார். 

இவர்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாக பயின்று வந்த நிலையில், இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் காதல் வயப்படவில்லை. பின்னர் கல்லூரி ரீயூனியனில் சந்தித்த நேரத்தில் காதல் மலர்ந்துள்ளது. 

தற்போது இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து தங்களின் இல்லற வாழ்க்கையை துவங்கியுள்ளனர். மேலும், ஊரடங்கு காரணமாக திருமணம் குறித்து யாரிடமும் கூறவில்லை என்றும், ஊரடங்கு முடிந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடுத்தவதாகவும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Tv Famous Yogi got marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->