சின்னத்திரை டு வெள்ளித்திரை..! ஹீரோவாகிறார் விஜய் டிவி பிரபலம்..! - Seithipunal
Seithipunal


விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமாவுக்கு சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் போன்ற ஹீரோக்களை கொடுத்திருக்கிறது. 

இந்த வரிசையில் அடுத்து வருகிறார் ராமர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தற்போதைய ஸ்டார் ராமர் தான். உலகம் முழுவதும் அவரது காமெடிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மதுரை அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து, நாடகத்தில் காமெடி செய்து, அதன் மூலமாக தொலைக்காட்சிக்குள் வந்தார்.

சமீபகாலமாக சினிமாவில் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த ராமர், இப்போது ஹீரோவாகவும் ஆகிவிட்டார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்கிறார். அந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. 

நேற்று பூஜையுடன் படத்தின் பணிகள் துவங்கியது. சூப்பர் டாக்கீஸ், அவதார் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. குறும்பட இயக்குனர் மணி ராம் இயக்குகிறார். ஜபீஸ் கே.கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், விஷ்ணு விஜய் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் மணிராம் கூறியதாவது: இது காமெடி கலந்த திரில்லர் படம், ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்து கொள்ளும் பல்வேறு முகமூடிகளை அணிந்திருக்கிறார்கள். அந்த முகமூடிகளுக்கு பின்னால் இருக்கும் முகத்தை காமெடியாக சொல்லுகிற த்ரில்லர் படம். 

முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண்முன் காட்டப்போகும் படம். மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வருகிறோம், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay tv actor acting in movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->