சரவணா ஸ்டார் அண்ணாச்சியா இது..? மீசையில்லா விஜயை.. கலாய்க்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


பிகில் படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் மாளவிகா மேனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர். சென்னையிலிருக்கும் பனையூரில் ஒரு செட் போடப்பட்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

இந்நிலையில், தற்போது இணையதளத்தில் விஜய் மீசை இல்லாமல் நடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனை தொடர்ந்து தாதா87 படத்தின் இயக்குனரான விஜயஸ்ரீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் மீசையில்லாமல் நடிப்பது குறித்து ஒரு பதிவை போட்டு இருக்கின்றார்.

அதில் 2019 இல் அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்திய மீசையில்லாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "தற்போது தந்தி செய்தியை பார்த்தேன். அதில் மாஸ்டர் படத்தில் என் கற்பனையை நிஜமாக்கிய லோகேஷ் மற்றும் விஜய்க்கு என் நன்றிகள். திரையில் கோடான கோடி ரசிகர்களுடன் அந்த காட்சியை காண காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்." என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியா இது..? என்று கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sri release vijay photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->