இது உண்மை இல்லை! தன்னை பற்றிய தவறான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஜய் சேதுபதி வெளியிட்ட அதிரடி பதிவு.! - Seithipunal
Seithipunal


 தமிழ் சினிமாவில் சிறு,சிறு கதாபாத்திரங்களில் நடித்து தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் இயல்பாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

விஜய் சேதுபதி எப்பொழுதும் சமூகம் சார்ந்த வி‌ஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர். மேலும் சமீபத்தில் கூட இவர் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவாஜிகரம் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக கூறினார். இதற்கு ரசிகர்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் கடந்த 6-ந் தேதி தமிழக காவல்துறையால், போன் திருட்டைக் கண்டுபிடிக்க ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதற்காக காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்  நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். 

அப்பொழுது விஜய் சேதுபதி பேசுகையில், இந்த ‘டிஜிகாப்’ செயலி மூலம்  காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையேயுள்ள  இடைவெளி, குறையும் என்று கூறினார்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசியதை, பிரபல டிவி சேனல் வெளியிட்டது. அதனை தொடர்ந்து அந்த பதிவில் விஜய் சேதுபதி கூறிய வாசகத்தை பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் மாற்றி விஷமிகள் சிலர் பரப்பி உள்ளனர். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.



இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.
எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.  இந்த பதிவுடன் தான் பேசிய வீடியோ இணைப்பையும் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethupathi tweet against controvarsy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->