மாஸ் வில்லன் நடிகரா இது.?! அடையாளமே தெரியாத வீடீயோ வைரல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி போட்டோஷூட்டிற்காக நாடக கலைஞர் வேடமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல், மாநகரம் இந்தி ரீமேக்ஸ என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் விஜய் சேதுபதி-அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இத்தகைய நிலையில் நடிகர் விஜய் சேதுபதி போட்டோஷூட்டிற்காக நாடக கலைஞர் வேடமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி படுவைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay sethupathi latest Video viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->