800 திரைப்படத்தில் இருந்து அதிகாரபூர்வ விலகல்.. நன்றி வணக்கத்தோடு முடித்துவைத்த விஜய் சேதுபதி.! - Seithipunal
Seithipunal


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படத்தில், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. இந்த விஷயம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை விளக்கும் பொருட்டு முத்தையா தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது. 

இருந்தாலும், இலங்கையில் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முத்தையாவின் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று தமிழக மக்கள் திட்டவட்டமாக தெரிவித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். 

இந்நிலையில், முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில்‌ சிலரால்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள்‌ காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்‌.

என்‌ மீதுள்ள தவறான புரிதலால்‌ 800 படத்தில்‌ இருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதி அவர்களுக்கு சிலர்‌ தரப்பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌ எனவே என்னால்‌ தமிழ்‌ நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌ பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதி அவர்களின்‌ கலை பயணத்தில்‌ வருங்காலங்களில்‌ தேவையற்ற தடைகள்‌ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்‌.

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்துவிடவில்லை அதை அனைத்தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்கால தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு, உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்‌ அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும்‌ கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌ அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும்,‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்,‌ தமிழ்‌ திரைப்பட கலைஞர்களுக்கும்‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர்களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ " என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்படத்தில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியாவதை தெரிவிக்கும் பொருட்டு, முத்தையாவின் அறிக்கையை பதிவு செய்து நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathi forgot 800 Movie Acting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->