மேலும், ஒரு படத்தில் கமலுடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் மிக முக்கியமான நடிகராக தற்போது விஜய்சேதுபதி இருந்து வருகிறார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவர் தயங்குவதே இல்லை.

முன்னதாக அவர் ரஜினியுடன் பேட்டை படத்திலும், விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். 

இத்தகைய நிலையில் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து ஒரு புதிய படத்தில் விஜய்சேதுபதி நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க போகிறது. இதற்கு கமல் தான் கதை எழுதப் போவதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படம் தேவர்மகன் திரைப்படத்தின் 2வது பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை மலையாள இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கப் போகிறார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathi again act in kamal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->