உருவாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை படம்! கெத்தாக பட தலைப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


பல படங்களில் நடித்து திரையுலகத்தின் மூலம் மக்களிடம் அறிமுகமானவர் ஜெயலலிதா. பின்னர் தமிழக அரசியலில் களமிறங்கிய அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, தமிழகத்தின் முதல்வரானார்.

இந்நிலையில் மறைந்த இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.தமிழகத்தின் முதலமைச்சராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பல பிரபலங்களும் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றனர்.

மேலும் இயக்குனர் கௌதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணைய தொடராகவும் இயக்கி வருகிறார்.

      

இந்நிலையில் இயக்குனர் விஜய் அவர் உருவாக்கவிருக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்திற்கு தலைவி என தலைப்பு வைத்துள்ளார். மேலும் அதனை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தலைவி படத்தை  விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள்  மற்றும் பிற தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

       

 இந்நிலையில் இது குறித்து இயக்குனர் விஜய் கூறுகையில், தலைவி என்ற இந்த தலைப்பு ஜெயலலிதா அவர்களை தவிர வேறு எவருக்கும் பொருத்தமாக இருக்க முடியாது. அவர் பிறப்பிலேயே தலைமைப் பண்பை பெற்றவர், மேலும் கடின உழைப்பு, புத்திசாலித்தனம் மற்றும் அனுபவம் ஆகியவற்றையும் பிறப்பிலேயே பெற்றார். அதனால்தான் இந்த படத்தை இயக்க ஒப்புக் கொண்டு அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay released the title jayalalitha bio movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->