பீஸ்ட்டுக்கு பிறகு மூத்த இயக்குனருடன் கைகோர்ப்பாரா? தளபதி.! எதிர்பார்ப்பை கிளப்பிய தகவல்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பெரிய அளவில் செலவு செய்து உருவாக்கி வருகிறது. பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அடுத்த மாதம் பீஸ்ட் படத்தின் 4வது கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்க இருக்கிறது. பீஸ்ட் படம் முடிவடைவதற்குள் தளபதி விஜய் அடுத்து நடிக்க போகும் புதிய படத்திற்காக அவரை நிறைய இயக்குனர்கள் சந்தித்து கதை கூறி வருகின்றனர். 

அந்த வகையில் கோலிவுட்டில் ஒரு காலத்தில் மிகவும் சூப்பர் ஹிட் இயக்குனராக இருந்த பி.வாசு ஒரு கதையை விஜய்க்காக கூறி இருக்கிறார். இவர் ஒரு காலத்தில் சத்யராஜ், ரஜனி போன்றோருக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். விஜய்யின் அடுத்த படத்தில் இயக்குனராக பி.வாசு இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விஜய் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்று விஜய் தரப்பில் கூறப்படுகிறது. 

இதற்கு காரணம் இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து படம் எடுக்கவே விஜய் விரும்புவார் என்றும், மூத்த இயக்குனர்களுடன் சேர்ந்து படம் பண்ணுவாரா என்பது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay may Join with P vasu after Beast Movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->