லோகேஷ் கனகராஜை இந்த காரணத்துக்காக வெளுத்து வாங்கும் விஜய் ரசிகர்கள்.! கொஞ்சம் கேப் விடுங்கப்பா.!  - Seithipunal
Seithipunal


தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் அமேசான் ப்ரைம் வெளியிட்டு இருக்கின்றது. கோலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் விஜய். 

இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இந்தப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகிய பலர் நடித்து இருந்தனர். 

Image result for master seithipunal

திரையரங்குகளில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதுவரை இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், இந்த திரைப்படம் கடந்த 21ம்தேதி அமேசான் ப்ரைம்-ல் வெளியாகியது. 

மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி அமேசான் ப்ரைம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றது. இதை கண்ட ரசிகர்கள் உற்சாகம் அடைந்த அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து இவ்வளவு அருமையான காட்சிகளை இப்படத்தில் இருந்து நீக்கியது ஏன்.? மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சி தான் இது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இயக்குனர் லோகேஷ் கனகராஜை வதைத்து எடுக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay fans question to director lokesh kanagaraj


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->