விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்.! - Seithipunal
Seithipunal


டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி படங்களில் நடித்து மிகப்பெரிய பிரபலமானார். இந்த படங்களின் வெற்றியினால் விஜய் தேவரகொண்டாவுக்கு நிறைய ரசிகர்கள் அதிகரித்தனர்.

 இவருக்கு இளம் பெண்களின் ரசிகர் கூட்டம் மிக அதிகம். தற்போதைய பெண்களின் சாக்லேட் பாய் என்று கூறினால் விஜய் தேவரகொண்டாவை தான் அனைவரும் கைகாட்டுவார்கள். விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது லைகர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. 
 
இதனை பூரி ஜெகன்நாத் இயக்கி இருக்கும் நிலையில், இதில் ஒரு பாக்சிங் வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு அனன்யா பாண்டே ஜோடியாக நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில், இந்திய அளவில் ₹.15.50 கோடியும், உலகளவில் ₹.23.65 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay devarkonda liger movie day 1 collection


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->