'ஜனகன' படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க முன்வந்த விஜய் தேவரகொண்டா! - Seithipunal
Seithipunal


ஜனகன படத்தில் விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்காமல் நடிக்க முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'லைகர்' என்ற படம் வெளியானது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி  தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்துக்கு விஜய் தேவரகொண்டா ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாகவும், லாபத்திலும் பங்கு வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் வசூல் சரிவால் தற்போது விஜய் தேவரகொண்டா ரூ.6 கோடியை திருப்பி கொடுத்து, லாபத்திலும் பங்கு வேண்டாம் என்று தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குனர் பூரி ஜெகந்நாத்தும் சம்பளத்தில் 70 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லைகர் படத்தின் வசூல் சரிவால் விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்க இருந்த ஜனகன படத்தை கைவிட பட நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஜனகன படத்தில் விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்காமல் நடிக்க முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படத்தின் பணிகளை திரும்ப தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Devarakonda without salary act in Janakana movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->