ஆதித்ய வர்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அர்ஜுன் ரெட்டி.! ரசிகர், ரசிகைகள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தை இந்தியில் கபிர் சிங் என்ற பெயரிலும், தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் இந்தியில் பெரும் வெற்றியை பெற்றது. தமிழில் துருவவிக்ரமுக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கித் தந்தது.

இருப்பினும் படம் வெற்றி பெற்றதா என்றால் கேள்விக்குறிதான். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அர்ஜுன்ரெட்டி கதாநாயகனான விஜய்தேவரகொண்டா விக்ரமை பாராட்டி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். 

அந்த கடிதத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்த துருவ் அதில்,"அர்ஜுன் ரெட்டி போன்ற ஒரு சிறந்த படத்தின் மீதான காதல் தான் ஆதித்ய வர்மாவை எடுக்க எங்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தது. உங்களைப் போன்ற வெற்றியாளராக நானும் ஒருநாள் வருவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

உங்களால் என்றென்றும் நான் ஈர்க்கப்பட்டவர்." என்று தெரிவித்து இருக்கின்றார். இதனை இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது ரசிகைகளுக்கும் இது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay devarakonda wishes to dhuruv vikram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->