காதலிக்க ஆரம்பிச்சு இத்தனை வருஷமாச்சா..?! விக்கி, நயனின் க்யூட் ஸ்டோரி.!  - Seithipunal
Seithipunal


நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்களும் தங்களுடைய பங்குக்கு இணையத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு, காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அதுபோலவே நேற்று நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தினத்தினை பரிமாறிக் கொண்டு இருக்கின்றனர்.

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவ்வப்போது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். 

vignesh nayanthara seithipunalக்கான பட முடிவுகள்

இந்நிலையில் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக நடிகை நயன்தாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் க்யூட் லவ் ஸ்டோரி என்று தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அதுபோலவே இயக்குனர் விக்னேஷ் சிவனும், 'நாங்கள் காதலிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்படி போனது என்றே தெரியவில்லை. அழகான ஞாபகங்கள் பல இருக்கின்றன. உன்னுடைய அன்பினால் ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினம் தான் என்று பதிவிட்டு இருக்கின்றார். 

இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு அட்வைஸ் செய்யும் கொடுத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh shivan insta post


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->