ஒரு சமூகத்தின் அவல பிரச்சனையே "மாவீரனின் பிள்ளை".. இது சாதிய படம் கிடையாது - வீரப்பன் மகள்.!! - Seithipunal
Seithipunal


வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடிக்கும் " மாவீரன் பிள்ளை " படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

வீரப்பன் என்று கூறினால் ஒரு காலத்தில் எவ்வளவு பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்பது தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடக மாநிலம் சேர்த்து அறிந்த விஷயம் ஆகும். அவரின் இளைய மகள் தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார். 

வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவரது இளைய மகள் விஜயலட்சுமி திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். "மாவீரனின் பிள்ளை" என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் அவர் நடிக்க தொடங்கிய வீடியோ காட்சிகளும் வெளியாகின. 

சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில், "மாவீரனின் பிள்ளை" படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பேசிய வீரப்பனின் மகள், "மாவீரன் பிள்ளை" படம் சாதிய படம் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு சமூகத்தின் அவலங்களை எடுத்துக் கூறும் திரைப்படம். 

பெண்களின் பாதுகாப்பு, மதுவிலக்கு மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்த படம், எனது அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், அவரது புகைப்படத்தை போல போஸ்டரில் தனது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளோம். 

அவரின் வாழ்க்கை கதைக்கும், படத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. வீரப்பன் வாழ்ந்த காட்டில் பல புதையல் இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். அது உண்மைதான். அது எனது அப்பாவுக்கும், அப்பாவின் நெருங்கிய நண்பர் கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும். தற்போது இவர்கள் இருவருமே உயிருடன் இல்லை " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veerappan Daughter Vijayalatsumi Maveeran Pillai Movie Pressmeet 10 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->