நான் இவருக்கு தான் "ஐ லவ் யூ" சொல்லப்போகிறேன் என ஓப்பனாக பேசிய வரலக்ஷ்மி! - Seithipunal
Seithipunal


சிம்பு நடிப்பில், வெளியான "போடா போடி" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி. இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் ஆவார். முதல் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் வரலக்ஷ்மி.

சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் வரலக்ஷ்மி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். பெரும் சர்ச்சைக்கு பிறகு வெளியான சர்க்கார் படத்திலும் இவர் முக்கிய வில்லலியாக நடித்து பெரும் புகழை பெற்றார். 

இந்நிலையில் வரலட்சுமியும், நடிங்கர் விஷாலும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அனிஷா என்ற பெண்ணை தான் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் விஷால் அறிவித்தார். இதனையடுத்து விஷால், வரலக்ஷ்மி பற்றிய கிசுகிசு பேச்சுக்கள் அப்படியே நின்றுபோனது. மேலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஷால் தனது சிறந்த தோழி வரலக்ஷ்மி தான் எனவும் கூறினார்.

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலக்ஷ்மி சரத்குமார் தனக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மிது கிரஷ் இருப்பதாகவும். நான் ஐ லவ் யூ சொல்வதென்றால் பாகுபலி பிரபாஸிடம் தான் சொல்வேன் என நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஆனால் வரலஷ்மி உண்மையாகவே யாரை காதலிக்கிறார், யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று இதுவரை ரசிகர்களுக்கு கேள்வியாகவே உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varalakshmi talk about love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->