நயன்தாராவை இழிவாக பேசிய ராதாரவி! அடுக்கடுக்கான நெத்தியடி கேள்விகளால், வச்சு செய்த வரலக்ஷ்மி சரத்குமார்.! - Seithipunal
Seithipunal


நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் நடிகரும், டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவருமான ராதாரவி கலந்துகொண்டு பேசினார்.அவர் பேசுகையில், நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவர் குறித்து வராத செய்திகளே கிடையாது. பேயாகவும் நடிக்கிறார். சீதாவாகவும் நடிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வைத்திருப்பார்கள், பின்னர் மறந்துடுவாங்க.

 முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர்.விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் போலவும் இருக்கிறார்கள். கூப்பிடும் போலவும் இருக்கிறார்கள் என் அருவெறுப்பாக பேசியுள்ளார். அவரது பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை பதிவிட்டுள்ளார்.

‘பெண்களை அசிங்கப்படுத்துவது, பெண்களைப் பற்றி ஆபாசமான நகைச்சுவை பேசுவது பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது எல்லாம் இந்த திரைத்துறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.இதை போன்ற விஷயங்களை முந்தைய தலைமுறை நடிகர், நடிகர்கள் கண்டுகொள்ளாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இதற்கு காரணம். 



 

திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு காரணமாக இருப்பர்.



 

கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூலம் எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்று சில முட்டாள்கள் நினைக்கின்றனர். அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவர்களது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது.வளருங்கள் பெண்களை மதியுங்கள், அவர்களது உடையை கவனிக்க தேவையில்லை.



 

ஒரு ஆண் என்ன செய்தாலும், அது எவ்வளவு மோசமான, தவறான, நெறிமுறையற்ற செயலாக இருந்தாலும், அந்த ஆணுக்கு எத்தனை துணைகள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் அவரது குணத்தை மதிப்பிட மாட்டீர்கள் அதனை போல பெண்களைப் பற்றி மதிப்பிடவும் உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் சகோதரி என்ன உடை அணிந்திருந்தாலும் அவரை  பலாத்காரம் செய்யும் எண்ணம் வராதல்ல.  அதே போல மற்ற பெண்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.



 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varalakshmi sarathkumar tweet agaist radharavi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->