விருது வழங்கும் விழாவில், செம்ம சூப்பராக இருக்கும் வாணி போஜன்.! மெல்லிசான புடவையில் மாஸான ஃபோட்டோ.! - Seithipunal
Seithipunal


நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்த வாணி போஜன் தெய்வமகள் சீரியல் மூலமாகத்தான் ரசிகர்களிடம் நிறைய வரவேற்பை பெற்றார். இவர் ஏர்லைன்ஸில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து டிசைனராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். 

இதன் மூலம் விளம்பர படங்களில் நடித்து பிரபலமடைந்த அவருக்கு விஜய் தொலைக்காட்சியின் ஆஹா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தெய்வமகள் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த வாணி போஜன் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் களமிறங்கினார். 

படிப்படியாக முன்னேறிய அவர் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரது நடிப்பில் ஒரு இரவு, அதிகாரம் 79 ஆகிய திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. 

மேலும், நேக்கு மாத்திரமே செப்பே என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.கதாநாயகியாக வைபவ்வின் சிக்சர், ஓ மை கடவுளே, ட்ரிபிள்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக வாணி போஜன் லாக்கப் மற்றும் ms.w உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில், நடிகை வாணி போஜன் விருது வழங்கும் விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vani bojan award function photoshoot viral 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->