#BigBreaking : முதலிடம் பிடித்த வலிமை., இரண்டாவது இடத்தில மாஸ்டர்., ட்வீட்டர் அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைதள பக்கத்தில் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். இதில் குறிப்பாக நடிகர் விஜய், அஜித் ரசிகர்கள் ஹாஷ்டேக் மூலம் நடிகர் விஜய், அஜித் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், விஜய், அஜித் புதிய திரைப்படங்கள் குறித்த ஹாஷ்டேக்களை யார் அதிகம் ட்ரெண்ட் செய்வது என்ற போட்டி இவர்களுக்குள் போர் போன்று நடைபெறும்.

ரசிகர்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட ட்விட்டர் இந்தியா நிறுவனம், அவர்களை மேலும் இந்த மாயவலையில் சிக்க வைக்கும் விதமாக, ட்விட்டர் வலைத்தளத்தில் எந்த ஹேஸ்டேக் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை ஆண்டுதோறும் இருமுறை அல்லது மூன்று முறை வெளியிட்டு வருகிறது.

ரசிகர்களும் இதற்காக வேலை வெட்டி அனைத்தையும் விட்டுவிட்டு, முழுவதும் சமூக வலைத்தளத்தில் மூழ்கி, நமது நடிகர் தான் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று, ஹாஷ்டேக் மூலம் தொடர்ந்து ட்ரெண்ட் செய்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

எந்த பதிவு போட்டாலும், அதில் விஜய், வலிமை, அஜித் குமார், தளபதி, தல, பீஸ்ட் இதுபோன்ற ஹேஸ்டேக்களைப் பயன்படுத்தி விடுவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டுவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டுவிட்டர் வலைதள பக்கத்தில் ஹாஸ்டலில் நம்பர் 1 இடத்தை 'வலிமை' ஹேஸ்டேக் பிடித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை அதிகம் பகிரப்பட்ட ஹேஸ்டேக் 'வலிமை' என்று டுவிட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் 'மாஸ்டர்' இரண்டாம் இடமும், அஜித்குமார் என்ற ஹேஸ்டேக் 4வது இடமும் பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VALIMAI first place in twitter trend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->