பெண்கள் அரவணைப்பு., ஆண்கள் புறக்கணிப்பு.! கவிஞர் வைரமுத்து உருக்கம்.! - Seithipunal
Seithipunal


பெண் கலைஞர்களை ஆதரிப்பதை விட, ஆண் கலைஞர்களை ஆதரிப்பது வடநாட்டு திரையுலகில் குறைவு என்று கவிஞர் வைரமுத்து டுவிட் செய்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியின்போது, "இந்திப்படங்களில் தான் பணியாற்றும் பொழுது, தனக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், சுஷன்ட் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியிருக்கும் டில் பச்சாரோ படத்தின் இயக்குனர் என்னை சந்தித்த போது, பலரும் அவரிடம் ரகுமானிடம் செல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், சிலர் தடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

எனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்கவே ஒரு கும்பல் காத்திருக்கின்றது." என்று கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பு ரகுமான்! அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை."என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu tweet about AR rahman saddest moment 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->