மீண்டும் களமிறங்குகிறார் வைகை புயல்! வெளியான கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டரால் உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ரஜினி,கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து காமெடிகளில் கலக்கியவர் நடிகர் வடிவேலு. இவரது காமெடிகென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் மாபெரும் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு பின்னர் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மற்றும் எலி என்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு மீண்டும் கத்தி சண்டை, சிவலிங்கா, போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து  இயக்குனர் ஷங்கரும் லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கவிருந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருந்தார். ஆனால் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இதில் நடிப்பதிலிருந்து விலகிவிட்டார். இதனால் இவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

 

இந்நிலையில் அவர் மீண்டும் நடிப்பாரா என சந்தேகம் எழுந்த நிலையில் வடிவேலு தற்போது  ஷக்தி சிதம்பரம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பேய் மாமா என பெயரிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadivelu act in new movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->