நடிகைகளுக்கு வரும் பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு.! தென்னிந்திய திரையுலகில் இடம்பெற்றுள்ள குழு உறுப்பினர்களை அறிவீர்களா?.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

இது ஒரு புறம் இருந்தாலும்., பல இளம் நடிகைகள் திரைத்துறைக்கு வாய்ப்பு கேட்டு வரும் சமயத்திலேயே படுக்கைக்கு நேரடியாக அழைக்கப்படும் கலாச்சாரமானது இருந்து வருகிறது. இந்த பிரச்சனை முதலில் வெளியான நாட்களில் இருந்து மீ டூ என்ற ஹேஸ்டேக்குகள் இணையத்தில் வைரலாகி உலகம் முழுவதும் திரைத்துறையில் நடைபெறும் பாலியல் புகார்களை வெளிக்கொண்டு வந்தது. 

இந்த பிரச்சனை நடந்து கொண்டு இருந்த சூழ்நிலையில்., இதனை சில நடிகைகள் தவறாக உபயோகம் செய்யவும் துவங்கினர். இந்த விஷயத்தில் பல முன்னணி இயக்குனர்கள்., நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று பலரும் சிக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவின் தலைவராக நாசர் மற்றும் சங்க உறுப்பினர்களாக விஷால்., கார்த்தி., பூச்சி முருகன்., நடிகைகள் குஷ்பு., ரோகிணி., சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர்கள்., வழக்கறிஞர்கள் என்று 8 பேர் இருப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக திரையுலகில் இருக்கும் நபர்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏதேனும் நடந்தால் இது குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில்., தகுந்த நடவடிக்கை எடுத்துப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary

to control me too by investigate about complaint in south Indian film industry


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal