திண்டுக்கல் மாவட்டத்தில் துணிவு படத்தின் 1 மணி காட்சி ரத்து.! - Seithipunal
Seithipunal


போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் உருவாகிய படம் துணிவு. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலகம் முழுவதும் 'துணிவு' படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்தத் திரைப்படம், தமிழகம் முழுவதும் முதல்காட்சியாக திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகியுள்ளது.

இப்படம் வெளியானதை அஜித் ரசிகர்கள் மிகப் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், துணிவு திரைப்படம் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் துணிவு திரைப்படத்தின் முதல்காட்சியான நள்ளிரவு 1 மணி காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து ஒரு மணிநேரம் தாமதமாக நள்ளிரவு இரண்டு மணிக்கு துணிவு படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thunivu midnight show cancel in dindukal theaters


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->