சல்மான் கான் தொடர்பு காரணமாக மிரட்டல்? பவன் சிங் மனு அதிர்ச்சி எழுப்பியுள்ளது...!
Threatened due Salman Khan connection Pawan Singhs petition raised shock
போஜ்புரி திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரம் பவன் சிங், மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் நேற்று அதிரடி புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலோடு தொடர்பு இருப்பதாக கூறிக்கொள்ளும் நபர்களிடமிருந்து தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , “பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் உடன் ஒரே மேடையில் தோன்றக் கூடாது, அவருடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று எச்சரிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை முதல் மர்ம நபர்கள் தன்னை மிரட்டியதாக பவன் சிங் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உத்தரவை மீறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்ற தீவிர எச்சரிக்கையும் தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால், தனக்கு உடனடி போலீஸ் பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வழக்கைத் தொடர்ந்து, ஓஷிவாரா காவல்துறை பல்வேறு திசைகளில் விசாரணையை தொடங்கியுள்ளது.அதிலும் குறிப்பாக, பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் சல்மான் கான் தொகுப்பில் போட்டியாளராக பவன் சிங் பங்கேற்றது நினைவுக்குரியது.
இதேவேளை, பஞ்சாபி பாடகர் மற்றும் அரசியல்வாதி சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய தொடர்புடைய குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் போதைப்பொருள் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
English Summary
Threatened due Salman Khan connection Pawan Singhs petition raised shock