#Biggboss 6 : இந்த வாரம் வெளியேறவுள்ள அந்த 2 பேர்.! டபுள் எவிக்‌ஷனால் அதிர்ச்சி.?!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. 6 வது சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 

20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிறைய சண்டை சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதில் 21ஆவது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நபராக இருந்த ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார். 

அதைத் தொடர்ந்து சாந்தி, அசல் கோளார், ஷெரீனா, VJ மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த வார எவிக்‌ஷன் லிஸ்ட்டில் ரக்‌ஷிதா, கதிரவன், குயின்சி, ஜனனி, நந்தினி, தனலக்‌ஷ்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

குயின்ஸ் மற்றும் தனலட்சுமி இருவரும் குறைந்த அளவு வாக்குகளை பெற்று இருக்கின்றனர் இருவரும் ஒரே அளவிலான வாக்குகளை பெற்றிருப்பதால் யாரை வெளியேற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த வாரம் டபுள் எவிக்ஷனாக தனலட்சுமி மற்றும் குயின்சி இருவருமே வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This Weak double eviction in Bb6


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->