‘மன்மோகன் சிங்’ வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கையை, சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல பிரபலமானவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டிகள் நடக்கிறது.

மன்மோகன் சிங், கடந்த 2004-ம் ஆண்டு பிரதமரான சூழ்நிலை குறித்தும் அவரது ஆட்சிக் காலம் பற்றியும், எடுக்கப்பட்டுள்ள ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தின் டிரெய்லர் சில நாட்கள் முன்பு வெளியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியிருக்கிறார். பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மன்மோகன் சிங்கை உள்கட்சி அரசியலுக்கு பலிகடா ஆக்கியது போல் சில காட்சிகள் அமைந்துள்ளது. இந்த காரணத்தினால் காங்கிரஸ் கட்சி இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த படத்தின் டிரெய்லரை பா.ஜ.க கட்சியினர் வருவது போல காட்சி உள்ளது.

இந்நிலையில் மன்மோகன் சிங் படத்திற்கு தடைவிதிக்க கோரி வழக்கறிஞசர் சுதிர் ஓஜே பீகார் நீதிமன்றத்தில்  வழக்கை தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த அனுபம் கேர் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்த உத்தரவிட்டுள்ளனர்.
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the accidental prime minister movie case


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal