தளபதி விஜய் நடிக்கும் வாரிசு பட ரிலீஸ் குறித்த மரணமாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் விஜய் தன் வாரிசு என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கிவருகிறார்.

இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்திவிட்டு பிறகு சென்னை கானாத்தூர் அருகில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். அந்த படப்பிடிப்பை காண ரசிகர்களும், அந்த பகுதியிலுள்ள பொதுமக்களும் திரண்டு வந்தனர்.

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கும் நிலையில் இதற்கு தமன் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy vijay varisu movie may release in 2023 january 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->