ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. விஜய் பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவரது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

வசூலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இந்த நிலையில், அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 65. இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். வருகிற 22ம் தேதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

இந்த நிலையில், ரசிகர்கள் விஜய் பிறந்த நாளில் காமன் டிபி ரெடி செய்து கொண்டிருக்க, தளபதி 65 படக்குழு அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 65 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 21 ஆம் தேதியே வெளியிடுவதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy 65 first look release on jun 21


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->