தலைவி SECOND LOOK வெளியானது!  அசல் ஜெ.வை போல இருக்கும் நடிகை!! - Seithipunal
Seithipunal


சினிமா துறையில் அறிமுகமாகி, தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று அரசியலில் நுழைந்தவர், நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயலலிதா. பல்வேறு இன்னல்கள், தடைகளை கடந்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறி தமிழகத்தினை பல முறை ஆட்சி செய்த இரும்பு பெண்மணி என்ற பெருமை அவருக்கு உண்டு.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வராக பதவியில் இருந்த பொழுதே சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முன் வந்தனர்.

தற்போது இயக்குனர் ஏ.எல். விஜய் எடுத்த ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் நடித்து வருகின்றார்.

கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். அரவிந்த்சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன. 

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில் ‘பார்டர்’ உள்ள சேலை அணிந்து கங்கனா ரனாவத் காட்சி அளிக்கிறார்.

இந்த தோற்றத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தலைவி படம் இந்தாண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalaivi movie second look


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->