எனக்கு என் மனைவியை விட அவரின் மீதுதான் அதீத காதல்.! என்ஜிகே இசைவெளியீட்டு விழாவில் சூர்யா அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நிறைவு பெற்று வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் ஒரு அரசியல் படம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில். இப்படத்தில், சூர்யா கதாபாத்திரம் குறித்த வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

என்.ஜி.கே. படத்தில் சூர்யா, எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர், 2004-லில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது போன்று நடத்து இருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில்., அடுத்த மாதத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து சூர்யா ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசியதாவது., இந்த படத்தின் படப்பிடிப்பின் சமயத்தில் ஒவ்வொரு நாட்கள் புதுவிதமான அனுபவத்தை தந்தது. 

இயக்குனர் செல்வராகவன் தனது இயக்கத்திலும்., டப்பிங்கிலும் தனது நுணுக்கத்தை சரியாக செல்லுவார். அவருடைய இயக்கத்தில் இருந்த காதல் வலையில் நான் வீழ்ந்தேன்., யுவனின் இசையானது எனக்கு வியப்பூட்டும் வகையில் இருந்தது., அவரது இசை காலம் கடந்தும் நிற்கும். 

நடிகை சாய்பல்லவி ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் நன்றாக உள்ளதா., இன்னொரு முறை நடிக்கவா என்று கேட்டு கேட்டு நடித்தார். எனது படங்களின் வரிசையில் இந்த படம் ஒரு நீங்காத முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்., இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படமும் அவரது இயக்கத்திலேயே நான் நடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya speech about ngk movie director selvaragavan hard work love


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->