சூப்பர் டீலக்ஸ் படத்தை, தமிழ் ராக்கர்ஸ்-ல் பார்ப்பேன் என்று கூறிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்த திரையரங்கம்! அப்படி என்ன நடந்தது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்  தயாராகி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துவருகிறார். திருநங்கை கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா.

மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்கள் முன்பு வெளியானது. இந்தப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் திருநங்கையாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை சுற்றிலும் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் ஆகியோர் பலர் உள்ளனர். சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்த நிலையில்,நெல்லையில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. விரைவில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் இருக்கும் என்று டிவிட்டரில் பதிவு செய்திருந்தது. இந்த டிவிட்டுக்கு விஜய் ரசிகர் ஒருவர் ‘ தமிழ் ராக்கர்ஸ்-ல் படத்தை பார்த்துவிட்டு, அந்த பணத்தை பிச்சைக்காரனுக்கு பிச்சை போடலாம் என்று பதிவு செய்திருந்தார். 

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் டிவிட் ஒன்றை ராம் முத்துராம் திரையரங்கு பதிவிட்டிருந்தது. அந்த டிவிட்டில் முதலில் அதை செய்யுங்கள். எங்களால் ஒரு ஏழை நன்றாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி. மேலும் அப்படி செய்து ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்புங்கள்’ என்று பதிவு செய்துள்ளனர்.







 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

super deluxe movie in ram muthuram cinemas


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->