சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...! விஷால் பேரை கூறி மோசடி..! - Seithipunal
Seithipunal


சினிமா தயாரிப்பாளராக உள்ளவர் நரேஷ் கோத்தாரி இவர் சென்னையிலுள்ள விருகம்பாகத்தைச் சேர்ந்தவர். இவரிடம் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருக்கும் வடிவுடையான், கடந்த 2016ஆம் ஆண்டு விஷாலை வைத்து ரூ. 7 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க உள்ளதாகவும் அதற்காக அவரிடம் கால்ஷீட் வாங்கியதாகவும் ஆவணங்களை காட்டினார்.
 
எனவே தயாரிப்பாளரும் படத்திற்காக 3 தவணையாக ரூ. 47 லட்சம் வழங்கியுள்ளார். ஆனால் அவர் சொன்ன படி படம் எதுவும் எடுக்கவும் இல்லை பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தயாரிப்பாளர் விஷால் தரப்பினரிடம் விசாரிக்க அவர் அப்படி எதுவும் ஒப்பந்தம் இல்லை என்று கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோத்தாரி விருகம்ப்பாகம் காவல் நிலையத்தில் வடிவுடையான் மீது புகார் அளித்தார். இதன் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. 

இயக்குனர் வடிவுடையான் ஏற்கனவே பொட்டு, சௌகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது சன்னி லியோனை வைத்து வீரமாதேவி என்றொரு வரலாற்று படத்தை இரண்டு வருடங்களாக இயக்கி வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunnyleone director fraud by using vishal name


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->