"நான் ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை தான்." ரத்தன் டாடா பயோ பிக் குறித்து சுதா கொங்கரா விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருப்பவர் தான் சுதா கொங்கரா. இவர் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக ஏழு ஆண்டுகள் பணியாற்றி ஹிந்தியில் சாலா கதூர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தமிழில் இவரது இயக்கத்தில் இறுதிச்சுற்று படம் முதன் முதலில் வெளியாகியது.

இந்த திரைப்படம் விளையாட்டு வீராங்கனையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அடிதட்டில் இருந்து வரும் ஒரு பெண் பாக்சிங் வீரராக சர்வதேச அளவில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை தான் இந்த கதை கூறியிருக்கும். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் சுதா கொங்கராவுக்கு ஹிட் இயக்குனர் என்ற பிராண்ட் மார்க் கிடைத்தது. தொடர்ந்து ,அவர் சூர்யாவின் சூரறைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

அதில், நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை தான். இருப்பினும், அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக எடுக்கின்ற எண்ணம் இல்லை." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sudha konguara about rathan tata bio pic


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->