சிம்புவின் 50-வது படத்தின் இயக்குனர் இவரா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளம் வருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் கிளைம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
அதுமட்டுமல்லாமல் இவர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் நார்தன் இயக்கத்தில் பத்து தல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து சிம்புவின் 50-வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்காரா  சிம்புவின் 50-வது படத்தை இயக்க உள்ளதாகதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudha Kongara direct in Simbu 50th movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->