வீடியோக்களை வெளியிடுவேன் என்கிறார் சுசித்ரா! எதிர்பார்ப்பை உருவாக்கும் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


கடந்த 2017-ம் ஆண்டு சமூகவலைதளங்களில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல சினிமா பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்கள் தீயாகப் பரவின. அவை உண்மையானதா, சித்தரிக்கப்பட்டதா என்பது எல்லாம் பார்க்காமல் பலரும் பரப்ப ஆரம்பிக்க சினி உலகில் பூகம்பமே வெடித்தது. 

அவ்வாறு வெளியான வீடியோக்கள் அனைத்தும் பின்னணிப் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அப்போதைய அவரது கணவர் கார்த்திக் கூறியிருந்தார். பின்னர் அதே வேகத்தில் சுசித்ராவுக்கும் கார்த்திக்கும் விவாகரத்தும் பெற்றனர். 

மிகவும் மனம் உடைந்து போன சுசித்ராதனது சகோதரியுடன் அடையாறில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர் காணாமல் போய்விட்டதாக கடந்த மாதம் அவரது சகோதரி புகார் அளித்தார். இந்த நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் நட்சத்திர விடுதி ஒன்றில் சுசித்ரா தங்கியிருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சுசித்ரா பேட்டியளித்துள்ளார். அதில் கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், அதில் இருந்த மீள கல்வி கற்க ஆரம்பித்தேன் எனவும், லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன். அதை நம் மக்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். யூடியூபில் சுசி குக் என்ற ஹேஷ்டேக்குடன் வெளிஇடுவேன் என சுசித்ரா கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suchithra coming back after suchileaks issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->