#BREAKING : திடீர் மரணம்.! ரஜினி, கமலை ஆக்‌ஷன் ஹீரோவாக்கிய ஜூடோ ரத்தினம் மறைவு.!  - Seithipunal
Seithipunal


ரஜினி, கமல் உள்ளிட்டவர்களுக்கு ஃபைட் மாஸ்டராக இருந்த ஜூடோ ரத்தினம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்திய சினிமாவில் 50 ஆண்டுகால வரலாறு படைத்தவர் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். 

ஒரு காலகட்டத்தில் இந்திய சினிமாவில் அதிகப்படியான படங்களில் விரும்பப்பட்ட பயிற்சியாளராக இவர் இருந்துள்ளார். ரஜினிக்கு 46 திரைப்படங்களில் சண்டை பயிற்சி கொடுத்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தவர். கமலுக்கு ஆக்சன் திரைப்படங்களுக்கான காட்சிகளில் பயிற்சி கொடுத்தவர்.

மேலும், கன்னட நடிகரான ராஜ்குமாருக்கு 52 படங்களில் சண்டை பயிற்சி கொடுத்திருக்கிறார். இதுவரை அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கின்றார். 

சினிமாவில் இருந்த காலத்தில் சென்னையில் வசித்து வந்த அவர் சிட்டியை ஒதுக்கிவிட்டு தற்போது தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனது 95 வயதில் உயிரிழந்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stunt master Judo Ratnam Died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->