தல அஜித்தை போல சூட்டிங் ஸ்பாட்டில் சூரி செய்த காரியம்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாத்துறையில் பிரபலமான நகைச்சுவை நடிகராக சூரி மாறிவிட்டார். சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன் என்று தமிழ் சினிமாவில் இருக்கும் மிக பெரிய நடிகர்களுடன் அவர்களுடைய படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துவிட்டார் நடிகர் சூரி. 

முன்னதாக ஆரம்பகாலத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் ஆகினார்.

இன்றுவரை வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா சீன் பிரபலமாக இருக்கின்றது. இன்று இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இந்த ஒரு காட்சிதான் என்றால் மிகையாகாது. சூரி எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை சிரிக்கும்படியாக வைத்துக்கொள்வாராம். 

தல அஜித் படப்பிடிப்பு தளத்தில் சமைத்து அனைவருக்கும் கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் தற்பொழுது நடிகர் சூரி தன்னுடைய கையால் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்தி இருக்கின்றார். தற்பொழுது சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soori shooting spot video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->