அட கொடுமையே.. பீஸ்ட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா.?! நல்ல வேலை தப்பிச்சிட்டாரு.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் திரைப்படம் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மே-11 ஆம் தேதி வெளியாகியது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை மனதில் வைத்துதான் நெல்சன் இந்த கதையை எழுதினாராம். திடீரென்று விஜய் பட வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்த கதையை அவரிடம் கூறி நெல்சன் சம்மதம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sk missed beast movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->