சர்ச்சையான பாலிவுட் நடிகையுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.! விறுவிறுப்பான கோலிவுட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளன. இதனைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கே.வி அனூதீப் இயக்கத்தில் 'எஸ்.கே.20' என்ற ஒரு படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாடல் காட்சிகள் புதுச்சேரியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மரியா ரியாபோஸப்கோ ஹீரோயினாக நடித்துள்ளார். 

மேலும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருக்கும் 'எஸ்.கே.21' என்ற புதிய படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன், சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. 

இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் கதாநாயகியாக நடிப்பதற்கு படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன் 'எஸ்.கே.22' படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான  தகவல் விரைவில் வெளியாகலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan acting new movie with kyara advani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->