நடிகர் விவேக் எதனால் உயிரிழந்தார்.. மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 4.30 மணி அளவில் உயிரிழந்தார்.

நடிகர் விவேக், அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக கோவில்பட்டியில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார்.

1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.  இந்திய அரசு வழங்கும் 2009ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நண்பர்கள், திரைத்துறையினர், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சிம்ஸ் மருத்துவமனையில் துணைத்தலைவர் ராஜீவ் சிவசாமி நடிகர் விவேக் மரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விவேக் நேற்று காலை 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது விவேக்கிற்கு சுயநினைவு, நாடித்துடிப்பு இல்லை. உடல் நிலையை பரிசோதித்து உடனே அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு உடல்நிலை மோசமாக இருந்தது, இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sims hospital says about vivek death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->