ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்த சிம்பு.. வெறித்தனமாக வெளியான வீடியோ.! - Seithipunal
Seithipunal


சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து ரீஎன்ட்ரீ கொடுத்தார். முதல் படம் மொக்கையாக இருந்தாலும் அடுத்ததாக மாநாடு படத்தில் வெறித்தனமாக நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் யுவன் இசை மற்றும் வெங்கட்பிரபுவின் திறமை என்று கூறினால் அது மிகையாகாது. 100 கோடி வசூலை பெற்று மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில், நடிகர் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் 10 தல படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஈஸ்வரன் பட கதாநாயகி நிதி அகர்வால் சிம்பு வீட்டில் தங்கியிருப்பதை போல புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, நடிகர் சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவருக்கும் இடையில் காதல் கசிந்து உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இத்தகைய நிலையில் நடிகர் சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இந்த சுவாரசியமான வீடியோவை ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu shooting video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->